பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும்மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைவது வழக்கம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் அவர்களுக்கென்று ஒரு இடம் கிடைத்துவிடுகிறது. அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் இன்று பல நபர்கள் உச்சத்தில் உள்ளனர், அதில் ஒருவர் தான் இவர்.
இவர்ப பெங்களூரில்பிறந்தார், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாடலிங் துறையில்ஆர்வம் காட்டி வந்தார்.அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார். மாடலிங் துறையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த இவர் அதன் பின்னர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து வந்தார்.பின்னர், இவருக்கு ஒரு படத்தில்சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்படத்தில் இவர் கவனிக்கத் தக்க விதத்தில் இல்லை என்றாலும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் உதவியாய் இருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடன் போட்டியாளராக கலந்து கொண்ட மற்றொரு நபருடன் இணைந்து இவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியிலும், இக்கால இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியது.
சினிமாவிற்குள் நுழைந்து சில காலத்திலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதையில் கதாநாயகியாக நடித்து வருகிறார், சொல்லப்போனால் நயன்தாராவிற்கு பின்னர் இவ்வளவு விரைவில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவருக்கு மட்டும்தான். இவர் நடிப்பில் இந்த ஆண்டு 3 படங்கள் வெளியாக உள்ளன.