திரையுலகில் நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன் அவரது பேரனும்,இளைய திலகம் பிரபு அவர்களின் மகனுமாகியவிக்ரம் பிரபு சில ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகனாகஅறிமுகமானார். அவர் கதாநாயகனாகநடித்த இவன் வேற மாதிரி படத்தில் வரும் ஹீரோயினி அவர்களுக்கு தாயாக வருபவர் தான் ஷர்மிளா.
இவன் வேற மாதிரி படத்தில் சுரபி அவர்களுக்கு தாயாக நடித்தஷர்மிளா,40 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறார். இவர்தமிழில் குறைவான படங்களிலேயேநடித்திருக்கிறார்.இவர் ‘காபூல்வாலா’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். நல்லதொரு குடும்பம், உன்னைக்கண்தேடுதேபடங்களில்தமிழில்நடித்திருந்தார்.
ஷர்மிளாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவேஆர்தோ பிரச்னை இருந்திருக்கிறது. இதற்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்சிகிட்சைபெற்றுவருகிறார்.ஆஸ்பத்திரியில் சேர்ந்த பின்புதான் இவர் ஒரு நடிகை என மருத்துவர்களுக்குதெரியுமாம். ‘பணம் இல்லாதவங்களுக்கு அரசு மருத்துவமனைதானே துணை’ என கூலாக சொல்லிவிட்டு சிகிட்சைக்கு பின்னர் ஓய்வில் கவனம் செலுத்தி வருகிறார் சர்மிளா.