தமிழ் திரையுலகில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்வு செய்து நடிக்கும் ட்ரெண்டை உருவாக்கியவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நயன்தாரா. விஜயசாந்தி அவர்களுக்குப் பிறகு, ஒரு கதாநாயகிக்கு அடைமொழி வைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அழைக்கும் கதாநாயகி என்றால் அது நமது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவார். இவரைப்போலவே சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்று வாணி போஜன் அவர்களை ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் எனும் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் வாணி போஜன். அத்தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் டிஆர்பியில் உச்சத்தைத் தொட்டது. அத்தொடரின் வெற்றிக்கு பின்னர் வாணி போஜன் அவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட லட்சுமி வந்தாச்சு எனும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அத்தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் கதாநாயகிகள் யாரும் நிலைப்பதில்லை ஆனால் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் கதாநாயகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒரு யூடியூப் சேனலில் வாணி போஜன் அவர்களை சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு வாணி போஜன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிலளித்தார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனக்குத்தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று இவர் பதிவிட்டு கொள்வது ரசிகர்களின் மத்தியில் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.