நமது அன்றாட வாழ்கையில் நாம் சாப்பிடும் உணவுகள் பலதில் பல நன்மைகள் இருந்து வருகிறது.அனால் நமக்கு அது அவ்வளவாக யாருக்கும் தெரியவில்லை.அவ்வாறு இருக்கையில் பலரும் மருத்துவர்களை அணுகி பல மாத்திரைகளை சாப்பிடும் அளவிற்கு காலம் மாறி விட்டது.அந்த வகையில் சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க கூடிய கீரையான மனத்தக்காளி சூப் எப்படி செய்வது என செய்முறை கீழே கொடுக்கப்பட்டுஉள்ளது.

தேவையான பொருட்கள்:
- மனத்தக்காளி கீரை – ஒரு கப்
- மனத்தக்காளி விதை – இரண்டு ஸ்பூன்
- தக்காளி – 1
- சின்ன வெங்காயம் – 6
- தேங்காய் பால்-1 கப்
- பூண்டு – 1
செய்முறை:
மனத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து அதை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.அதே போல் தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்து கொள்ளவும்,காடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சிறுது மஞ்சள் தூள், சிறுது சீராகம், மிளகு தூள், மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டை அதனுள் போட்டு நன்றாக வதக்கி விடவும்,பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம், தக்களியை சேர்த்து வதக்கி வைக்கவும்.நன்றாக வதங்கிய பிறகு தேங்காய் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் அத்துடன் சிறுது அளவு உப்பு சேர்க்கவும்.மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடலாம்.சுவையான கீரை சூப் ரெடி.