தமிழ் சின்னத்திரையை பொருத்த வரை பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தொலைக்காட்சியில் புது புது சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்த சன் டிவி தொலைக்காட்சி.

மேலும் இத்தொலைக்கட்சியில் ஒளிபரப்பு ஆகும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சி தான் 2022 ஆம் ஆண்டு வெளியான வானத்தை போல சீரியல் தொடர்.

இத்தொடரானது அண்ணன் மற்றும் தங்கையின் பாசத்தை அடிப்படையாக கொண்டது. வானத்தை போல சீரியல் தொட்கள் நடிகர்கள் மற்றும் நடிகைகள் என பலர் விலகியும் பலர் தற்போது புதிதாக நடித்து வரும் நிலையில் இதில் தற்போது கதை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இதன் நடிகர் ஒருவர் கார் விபத்தில் சிக்கியுள்ளர் என சோஷியல் மீடியாவில் செய்தி பரவி வருகிறது.

வானத்தை போல சீரியல் தொடரில் முத்தையாவாக நடித்து வருபவர் நடிகர் மனோஜ்குமார்.இவர் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.இவருக்கு வயது 70 ஆகிறது.இந்நிலையில் இவர் தனது மனைவி மற்றும் தனது உதவியாளர் ரகுபதி மூவரும் சேர்ந்து தேனி சென்றுள்ளார்கள்.மேலும் இடையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.மேலும் மூவரும் காயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இச்செய்தியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.