கோலிவுட் சினிமா திரையில் தற்போது வளர்ந்து இருக்கும் நடிகர்கள் ஒரு கால கட்டத்தில் பல கஷ்டங்களை கடந்து பல தோல்வி படங்களில் நடித்து அதன் பின்னர் மக்கள் மனதில் அவர்கள் ஒரு தனி இடத்தை பிடித்து பிறகு தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார்கள்.மேலும் இதில் பல நடிகர்கள் இருந்தாலும் தமிழில் தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் தளபதி விஜய் அவர்களும் ஒருவரே.

இவர் தமிழில் நடித்து வெளியாகும் படங்கள் மெகா ஹிட் ஆகி மக்களிடையே நூறு நாட்கள் கண்டிப்பாக ஓடி விடுகிறது.இவர் படம் வெளியானால் போதும் அதை அவரது ரசிகர்கள் திருவிழாவை போல கொண்டடுவார்கள்.மேலும் தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.

இந்நிலையில் இந்த லாக்டவுனில் பல மக்கள் தங்களது பொழுதை வீட்டில் இருந்த படி கழித்து வருகிறார்கள்.அந்த வகையில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரசிகர்கள் அவர்களது பழைய புகைப்படங்களை தேடி கண்டு பிடித்து அதை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதில் பல குழந்தைகளுடன் இவர் புகைப்படம் எடுத்துள்ளார்.அதை அவர்களது ரசிகர்கள் தற்போது இந்த குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என தேடி கண்டு பிடித்து பரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய் அவர்களின் கையில் இருக்கும் குழந்தை தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட நடிகை பிந்து அதை அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.