தளபதி விஜய் அவர்களுடன் ஜோடி போட்ட சாணக்கியா சாணக்கியா நடிகையா இது!? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!

0
120

2003ஆம் ஆண்டு சிலம்பரசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த தம் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ரக்ஷிதா. இவரது இயற்பெயர் ஸ்வேதா, சினிமாவிற்காக தனது பெயரை ரக்ஷிதா என மாற்றிக் கொண்டார்.இவருடைய அப்பா கௌரி சங்கர் என்பவர் சினிமாவில் பிரபலமான சினிமாடோக்ராஃபர் ஆவார். மேலும், இவருடைய அம்மா மம்தா ராவ் அவர்களும் பிரபலமான நடிகை ஆவார். இதன் மூலம் தான் நடிகை ரக்ஷிதாவுக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

rakshitha

2002 ஆம் ஆண்டு புனித் ராஜ்குமார் அவர்களின் நடிப்பில் வெளிவந்த அப்பு என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் ரஷிதா.தமிழில் தளபதி விஜய் உடன் மதுர என்ற திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.தம் படத்தில் இடம்பெற்றசாணக்கியா சாணக்கியா என்ற பாடலின் மூலம் தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் இந்த ரக்ஷிதா. இவர் தமிழில் பெரிதளவு படம் எதுவும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களானமகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், நாகர்ஜுனா, ரவி தேஜா ஆகியோருடன் ஜோடி போட்டு விட்டார்.

rakshitha

திரைத்துறையை விட்டு விலகிய பிறகு அரசியலில் குதித்தார் ரக்ஷிதா. பாஜக கட்சியில் இணைந்தார். பிறகு கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதற்கு பிறகு முழுமையாக குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார். இவருக்கு சூர்யா என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

Rakshitha

குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை ரக்ஷிதா உடல் பருமனாகி ஆள் அடையாளம் தெரியாததுபோல் காட்சியளிக்கிறார். இவரது சமீபத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என்று வாயைப் பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Rakshitha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here