விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மாப்பிள்ளை எனும் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் ஜனனி. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாம் இருவர் நமக்கு இருவர் எனும் தொடரில் செந்தில் அவர்களுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்புகளுக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செம்பருத்தி தொடரும் அதில் ஒன்று. இத்தொடரின் கதாநாயகனாக ஆபீஸ் புகழ் கார்த்தி அவர்களும், கதாநாயகியாக சபானா அவர்களும் நடித்து வந்தனர். இவர்கள் இருவருக்கிடையே உள்ள நெருக்கமான கெமிஸ்ட்ரி காட்சிகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
சில மாதங்களுக்கு முன்பு கார்த்தி அவர்கள் செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்டார். கார்த்தி அவர்களின் தம்பியாக நடிக்கும் கதிர் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஜனனி. இவர் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது செம்பருத்தி தொடரிலிருந்து இவர் நீக்கப்படுவதாக கூறினர், என்று இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கூறியிருந்தார். இந்த செய்தியை சொல்லும்போது ஜனனி மிகுந்த வருத்தத்துடன் இருந்தார்.
அனைவருக்கும் பரிச்சயமான ஒருவராக மாறிய ஜனனி தற்போது தனது துறையில் நன்றாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஜனனி அசோக் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.