வீரம், வேதாளம் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் தான் வித்யுலேகா ராமன்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் இவர் மிகவும் பிரபலமான ஒருவர். தெலுங்கில் இவரது மார்க்கெட் இப்பொழுது உச்சத்தில் உள்ளது. இவரது உடல் எடையை வைத்து படங்களில் நகைச்சுவை செய்வதும்,இவர் சமூக வலைதளங்களில்புகைப்படம் வெளியிட்டால்அதைக் கேலி, கிண்டல் செய்வது என்று பல நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றுள்ளார்.
அதனால் உடற்பயிற்சி, யோகா என தனது உடல் எடையை குறைத்து இப்பொழுது கொஞ்சம் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார் வித்யுலேகா. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்தது திருமணத்துக்கு பிறகுதான் இவர் தன் உடலை குறைத்து ஸ்லிம் ஆகிவிட்டார்.
திருமணமான நாள் முதல் இன்றுவரை தன் கணவருடன் ஊர் ஊராக சுற்றி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அதில் கடற்கரையில் பிகினி உடை அணிந்தது போன்ற புகைப்படங்களும் உள்ளடங்கும். அதைப் பார்த்தால் சும்மா இருப்பார்களா நமது சமூக வலைதள வாசிகள், இதில் அக்காவின் புகைப்படத்திற்கு கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.பாசிட்டிவ் கமெண்டும் வருகிறது நெகட்டிவ் கமெண்டும் வருகிறது. இவர் ஹனிமூன் முடித்து வரும் வரை நமது நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்தான்.