தமிழ் சின்னத்திரை பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்து வருவது மற்றும் அவர்களது அன்றாட வாழ்கையில் பெரும் பங்காக இருந்து வருவது இந்த சின்னத்திரை சீரியல் தொடர்கள் தான்.அதை பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல விதமாக புது புது கதைகளத்தை கொண்ட தொடர்களை மக்களிடையே அறிமுகபடுத்தி வருகிறார்கள்.மேலும் சீரியல் தொடர்களை தாண்டி பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.இந்நிகழ்ச்சி பல மொழி சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி அது ஹிட் ஆனா காரனத்தால் இதை தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வந்தது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விளங்குவது அதை தொகுத்து வழங்கும் பிரபல தமிழ் சினிமா நடிகர் தான்.இதை தமிழில் தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன்.இந்நிகழ்ச்சியில் பல தமிழ் சினிமா பிரபலங்களை அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைத்து அவர்களில் அந்த வெற்றிக்கு தகுதியானவர் யார் என்று மக்களால் முடிவு செய்யப்படும்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன் கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நான்காவது சீசன்காக மக்கள் அனைவரும் காத்து வந்த நிலையில் அதை தொடர்பான வீடியோ ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது.மேலும் இதில் பங்கு பெற போகும் போட்டியாளர்களின் பெயர்கள் சமுக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அண்மையில் வெளியான புகைப்படம் ஒன்று ரசிககர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில் பிரபல தமிழ் சினிமாவின் நடிகையான ரம்யா கிருஷ்ணன் அவர்களும் பிரபல நடிகை மற்றும் விஜய் டிவியின் தொகுப்பளினியாக இருந்து வரும் பிரபலமான டிடி அவர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் இந்த புகைப்படம் உண்மை தானா இல்லை நெட்டிசன்கள் வேலையா என குழம்பி போயுள்ளர்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.