2001 ஆண்டு பிரபுதேவா நடித்து வெளிவந்த மனதை திருடிவிட்டாய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி ஜெயராம். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்று எண்ணி அதில் தோல்வி அடைந்த பல கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.1984 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னை மற்றும் பெங்களூரில் தான். பள்ளி படிப்பில் சிறந்து விளங்கிய இவர் மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்டார் ஆனால் பின்னர் சென்னை எஸ். ஆர். எம் கல்லூரியில் பிசியோதெரபி படிப்பை முடித்தார். தான் கல்லூரியில் படித்திக் கொண்டிருந்த போதே மாடலிங் துறையில் ஈடுபட்டார். அதன் பின்னர் நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ் போன்ற துணிக்கடை விளம்பரங்களில் நடித்த இவர் பின்னர் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கிய அழுக்கு வேட்டி என்ற நாடகத்தில் நடித்தார்.
அதன் பின்னர் இவருக்கு 2001 இல் நீளா என்னும் கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மனதை திருடி விட்டாய் படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் வசீகரா,ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீ போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
படங்களில் பெரிதாக இவர் கவர்ச்சி காண்பித்து நடித்தது கிடையாது. இப்படி ஒரு நிலையில் இவர் இளம் வயதில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 2005 க்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சிக்கு மாறிய இவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கிராண்ட் மாஸ்டர் என்ற ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பின்னர் பின்னர் சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். இறுதியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் ஹிட் அடித்த நந்தினி என்ற மெகா தொடரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.