பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே கவர்ச்சி நிறைந்த படங்களில் நடிப்பதிலும், ஹாட் போட்டோசூட் செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படத்தை லைக் செய்வதற்கே ஒரு கூட்டம் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடிகை யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து நடந்தது. அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார்.யாஷிகா மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்க்குபல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
சர்ஜரிக்குப் பிறகு ஓய்வு எடுத்து வந்த யாஷிகா அடுத்த ஐந்து மாதத்திற்கு அவரால் நிற்கவும், நடக்கவும் முடியாது என்று பதிவிட்டிருந்தார். இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார். அவரால் திரும்ப கூடமுடியாதஅளவிற்கும முதுகெலும்பில் பலத்த காயம் அடைந்து உள்ளது என்று கூறியிருந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய யாஷிகா தனது உடல் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் காண தொடங்கினார். அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் வாக்கிங் ஸ்டிக் உடன் யாஷிகா ஆனந்த் நடந்துவந்த புகைப்படம் வைரலானது.
தனதுசமூக வலைதளப்பக்கத்தில் சமீபத்தில் முடியை கலர் செய்து ஒரு புகைப்படம் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் நீ இன்னும் சாகலயா என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு யாஷிகா ஆனந்த்“நான் சீக்கிரம் இறந்து விட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்” என்று சிரித்தபடி கூறியிருந்தார்.