விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன்50 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட பரிச்சயமில்லாத பல புதுமுக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அக்ஷராவும் ஒருவர். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே ஆர்மி தொடங்குவது வழக்கம். இந்த முறை ரசிகர்களின் பட்டியலில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக இருப்பது அக்ஷரா தான்.
அதிலும் இவரை அந்த காலத்து அமலா என்று பட்டம் கொடுத்தார் ராஜு. இந்த சீசன் ஆரம்பித்த புதிதில் இவரை குறித்து சோஷியல் மீடியாவில் தேடுவதிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் என்னுடைய கம்போர்ட் சோணை விட்டு வெளியில் வந்து யார் என்று தெரியாத நபர்களுடன் இருப்பது யாராவது, என்னை பிடிக்கவில்லை முகத்திற்கு நேராக சொல்வது, இதையெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக இங்கு தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் அக்சரா.
ஆனால், இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல அக்ஷரா ஹாப்பி நியூ இயர் என்ற ஷார்ட் பிலிமில் கூட நடித்து உள்ளார். மேலும், இவரது உண்மையான பெயர் ஸ்ரவியா சுதாகர். இவர் 2013 ஆம் ஆண்டு கேரள தங்க கடத்தல் விவாகரத்தில் கூட தொடர்பு இருப்பதாக இவரிடம் விசாரணை கூட நடந்தது.
ஆனால், தங்க கடத்தலில் ஈடுபட்ட பயாஸ் என்பவரை என் நண்பர்களின் மூலம் எனக்கு தெரியும். ஆனால் எனக்கும் இந்த தங்க கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், தான் நடித்த படங்கள் குறித்தோ பெயர் மாற்றியது குறித்தோ அக்ஷரா இது வரை வாய் திறந்தது இல்லை. மேலும், இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ‘தீண்ட தீண்ட’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து இருக்கிறார். ஆனால், அந்த படத்தில் ஸ்ரவியா என்ற பெயரில் தான் நடித்துள்ளார் அக்ஷரா.