பிரபல மலையாள நடிகரான அணில் நெடுமாங்கட் அவர்கள் நண்பர்களுடன் ஏரியில் குளித்து கொண்டு இருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இந்த செய்தியானது பெரும் சோகத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த 2020 வருடமானது சற்று மோசமாக இருந்து வரும் நிலையில் இந்த வருட ஆரம்பம் முதலே இந்த கொரோன நோயின் தாக்கத்தினால் மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்று மூலம் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றும் மற்றும் பலர் அதனால் இந்த உலகை விட்டு மறைந்தும் போயுள்ளர்கள்.மேலும் இந்நிலையில் இந்த கொரோன நோயினால் கிட்டத்தட்ட ஏழு மாத காலம் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து படி தங்களது அன்றாட வாழ்க்கையை திருப்பிபோட்டது.மேலும் இந்த வருடத்தில் பல சினிமா பிரபலங்களை நாம் இழந்துள்ளோம்.அந்த வகையில் சுஷாந்த் இர்பான்கான் என பலர் இந்த உலகை விட்டு மறைந்தார்கள்.மேலும் தமிழ் சினிமாவில் பிரபல பாடகரான எஸ்பிபி அவர்களின் மறைவில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை.
அதன பிறகு அண்மையில் பிரபல சீரியல் நடிகை சித்ரா அவர்களின் மரணம் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.இந்நிலையில் மக்கள் அனைவரும் 2020 ஆம் மிகவும் மோசமான ஆண்டாக இருந்து வருகிறது என கூறிய நிலையில் இந்த ஆண்டு முடிய உள்ள நிலையில் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி துணை நடிகராக இருந்த அணில் நெடுமாங்கட் அவர்களின் மறைவு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
48 வயதான நடிகர் அணில் அவர்கள் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துள்ளார்.இவர் நடித்து வெளியான படமான அய்யப்பனும் கொவ்சியும் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் இறந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் முன்னணி மலையாள சினிமா துறையினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Nothing. I have nothing to say. Hope you’re at peace Anil etta. 💔 pic.twitter.com/B6hOHGffkA
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 25, 2020