தமிழ் சினிமாவில் முன்னணி 70களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜய் குமார்.இவர் கோலிவுட் துறையில் அப்போது இருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் நடிகர் விஜய் குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் 1961 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ வள்ளி என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து விஜய் குமார் அவர்கள் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் விஜய்குமார் அவர்களின் மகனான அருண்விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.அருண் விஜய் அவர்கள் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்த படமான என்னை அறிந்தால் படம் அவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.மேலும் அப்படத்தை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.
நடிகர் அருண் விஜய் அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவரின் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அருண்விஜய் மாமனாருமான மற்றும் பிரபல தயாரிப்பாளருமான மோகன் அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.மேலும் ஏற்கனவே பல சினிமா பிரபலங்களின் மறைவை தாங்க முடியாத நிலையில் தற்போது மோகன் அவர்களின் மறைவு சினிமா துறையினரையும் மற்றும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.மோகன் அவர்களின் இறுதி சடங்கு இன்று மாலை நடை பெற உள்ளது.
Home சினிமா செய்திகள் சற்றுமுன் நடிகர் அருண் விஜய் வீட்டில் நேர்ந்த மரணம்!! சோகத்தில் திரையுலகினர்- வருத்தத்தில் ரசிகர்கள்..