கோலிவுட் சினிமா துறையில் 80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்து இன்று வரை அவரது காமெடி கட்சிகளை பார்த்து ரசிக்காத ஆளே கிடையாது.அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி.இவர் அன்று முதல் இன்று வரை காமெடி கிங் என மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருபவர்.தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு சற்று பஞ்சம் இருந்தாலும் இவர்கள் இடத்தை இன்னும் மறைக்க எவரும் இல்லை என்றே கூறலாம்.மேலும் இவர் மற்றும் செந்தில் அவர்களுடன் இணைந்து நடிக்காத படங்களே கிடையாது.கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடித்து வெளியான படங்கள் அனைத்துமே இவர்கள் இருவருக்கும் வெற்றி படங்களாகவே இருந்து வந்தது.மேலும் இவர் பல அப்போது இருந்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி அவர்களுக்கு சாந்தி என்பவருடன் திருமணம் நடந்த இவர்கள் இருவருக்கும் தற்போது இரண்டு பெண் குழந்தைகள் இருந்து வருகிறார்கள்.சுமித்ரா மற்றும் செல்வி இருவரையும் வெளியுலகத்திற்கு காட்டியதே இல்லை.இதில் சுமித்ரா அவர்கள் பல சமுக சேவைகளை செய்து வருகிறாராம்.
அதுவும் சென்னை அடையாரில் உள்ள காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு தவறாமல் தன்னால் முடிந்த உதவியை செய்வாரம்.இதில் அவர்களுக்கு உதவி செய்து வருபவர் யார் என்று தெரியாமலே இருந்த நிலையில் சுமித்ரா என்று கூறியுள்ளார்கள்.மேலும் யார் என பார்கையில் அவர் கவுண்டமணியின் மகள் என தெரியவந்துள்ளது.அதை கண்ட ரசிகர்கள் மற்றும் மக்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் நடிகர் கவுண்டமணியின் மகளா இது?? இவர் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள்!! புகைப்படம் உள்ளே!!