தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பல சினிமா துறைகளில் ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் அதில் எத்தனை ஆட்கள் தங்களது உழைப்பை போட வேண்டி உள்ளது.மேலும் அதில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மற்றும் சில பிரபலங்களை மட்டுமே நமக்கு தெரியும்.அனால் அதனை தாண்டி அதில் பணிபுரியும் பல கலைஞர்களை பற்றி நமக்கு அந்த அளவிற்கு தெரிவதில்லை.அவ்வாறு இருக்க தற்போது இந்த கொரோன காலத்தில் பலரும் தங்களது வேலைகளை இழந்து நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.மேலும் பல துணை நடிகர்களின் வாழ்கை சினிமாவை நம்பி தான் உள்ளது.இந்த லாக்டவுன் காரணமாக தற்போது சினிமா படங்கள் அந்த அளவிற்கு நடைபெறுவதில்லை.அவ்வாறு நடந்தாலும் அரசாங்கம் விதித்துள்ள சில கட்டுப்பாடு கீழ் தான் இயங்கி வருகிறது.
இந்நிலையில் பிரபல துணை நடிகரான ஹலோ கந்தசாமி அவர்கள் படங்களில் வாய்ப்புகள் இல்லாமல் தற்போது பெரிதும் கஷ்டப்பட்டு வருவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.நடிகர் கந்தசாமீ அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்து வெளியான பூ என்னும் படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
கந்தசாமி அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கி கொடுத்த படங்களான ரஜினிமுருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர்சங்கம் போன்ற படங்களில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க அவர் கூறுகையில் எனது நடிப்பிற்கோ அல்லது திறமைகோ அரசாங்கத்திடம் இருந்து எனக்கு எந்த ஒரு அங்கிகாரமும் கிடைக்கவில்லை எனவும்.நடிகர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனவும்.இந்நிலையில் இந்த கொரோன காலத்தினால் எந்த ஒரு நடிகருக்கும் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த கொரோன காலத்தில் தவிக்கும் கலைஞர்களுக்கு எதாவது உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.மேலும் இவரை போலவே சமீபத்தில் நடிகர் அப்புக்குட்டி அவர்கள் ஊரடங்கால் வேலை எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கொரோனவின் இரண்டாம் அலையின் மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக கூறி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் நான் ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு யாராச்சும் உதவி செய்யுங்க- ரஜினி முருகன் பட நடிகர் கந்தசாமி...