தமிழ் சினிமாவில் காமெடியில் ஜம்பவானாக இருந்தவர் நடிகர் விவேக்.இவர் மாரடைப்பால் மறைந்த செய்தியானது சினிமா துறையையும் மற்றும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த இவர் திடீரென இவ்வுலகை விட்டு மறைந்தார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் விவேக்.இவர் தமிழ் சினிமாவில் பலமுன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகர் விவேக் அவர்கள் நடிப்பையும் தாண்டி இவர் சமுக அக்கறையும் மற்றும் மக்களுக்கு தனது படங்களின் மூலமாக பல கருத்துகளையும் கூறி வருபவர்.மேலும் இவர் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்களின் வழியை பின்பற்றியவர்.இவர் கிரீன் கலாம் என்னும் அறக்கட்டளை மூலம் மரங்களை நட்டு வந்தார்.
இவர் ஒரு கோடி மரம் நட வேண்டும் என்ற குறிக்கோளை கொண்ட இவர் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மரங்களை மக்களுக்காக நட்டுள்ளார்.இந்நிலையில் நடிகர் விவேக் அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் மரியாதை உள்ள நிலையில் நடிகர் விவேக் அவர்களின் கடைசி ஆசையாக இருந்து வந்த சில விஷயங்கள் வெளியாகி வருகின்றனர்.
மேலும் அதில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் இவர் அவருடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக இருந்தது.ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.மேலும் விவேக் அவர்களின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.நடிகர் கமல்ஹாசன் அவர்களும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.
— Kamal Haasan (@ikamalhaasan) April 17, 2021