தமிழ் சினிமா துறையில் கொடி கட்டி பறந்து வந்த நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சிவகுமார்.இவர் சினிமாவில் பல பரிமாணங்களில் பணி புரிந்துள்ளார்.ஒரு நடிகராக ,இயக்குனராக என பல கால் பதிக்காத இடங்களே கிடையாது.மேலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே 1974 ஆம் ஆண்டு லக்ஷ்மி ககுமாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் சூர்யா, கார்த்தி மற்றும் பிருந்தா என பிள்ளைகள் இருக்கிறார்கள்.இதில் சூர்யா மற்றும் கார்த்தி அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர்.இன்னொரு மகனான கார்த்தி அவர்களும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் தனது காதலியான ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.அன்று முதல் இன்று வரை மக்கள் மனதில் இவர்கள் இருவரும் நீங்க இடம் பிடித்துள்ளனர்.
மேலும் நடிகர் கார்த்தி அவர்கள் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சினி என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்கள் இருவருக்கும் உமையாள் என்னும் பெண் குழந்தை ஏற்கனவே உள்ள நிலையில்.தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கார்த்தியின் மனைவி ரஞ்சினி அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளனர்.
நடிகர் சிவகுமார் அவர்கள் தத்தாவாக போகிறார்.மேலும் இந்த செய்தியானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.