மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த கொரோனநோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் மக்களை காக்கும் வண்ணம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அவ்வாறு இருக்க இந்த நோயினால் பலரும் இவ்வுலகை விட்டு மறைந்து போயுள்ளர்கள்.மேலும் இதில் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அவர்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் சினிமா துறையில் பல முன்னணி பிரபலங்கள் உடல்நலகுரைவினாலும் மற்றும் இந்த கொரோனநோயின் தாக்கத்தாலும் மறைந்துள்ளர்கள்.தற்போது பிரபல இளம் நடிகரான தீப்பெட்டி கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் கணேசன் அவர்கள் தமிழில் ரேணிகுண்டா பில்லா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.மேலும் இச்செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் கணேசன் அவர்கள் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் சில காலம் சென்னை ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் இருந்துள்ளார்.மேலும் இவருக்கு சில உடல் நலக்குரைப்பாடு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.இந்நிலையில் நடிகர் கணேசன் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர்.மேலும் தற்போது லாரன்ஸ் அவர்கள் ஏற்கனவே அவரது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டு நிலையில் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.மேலும் என்னால் முடிந்த அளவிற்கு அவரின் குழந்தைகளுக்கு உதவி செய்வேன் என கூறியுள்ளார்
Brother, I will take care of your children’s. Rest in peace 🙏 pic.twitter.com/EaBsblZiMl
— Raghava Lawrence (@offl_Lawrence) March 22, 2021