1989 ஆம் ஆண்டு வெளியான என்ன பெத்த ராசா என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.அந்த படத்திற்கு பிறகு அப்போது இருந்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் நடிகர் ராஜ் கிரண் அவர்கள் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர்,தயாரிப்பாளர் என பல முகங்களை சினிமா துறையில் காட்டியுள்ளார்.இவர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற காட்சிகளில் ஒன்றான நல்லி எலும்பை சாப்பிடும் காட்சி தான்.தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் சினிமாவிற்காக தங்களது உண்மையான பெயரை மாற்றி கொண்டார்வகளில் இவரும் ஒருவரே.
காதர் மொய்தீன் என்னும் பெயரை சினிமாவிற்கு வந்த பிறகு ராஜ் கிரண் என மாற்றிகொண்டார்.நடிகர் ராஜ் கிரண் அவர்கள் தமிழில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான கடைசி படமான சண்டக்கோழி 2 அதன் பின்னர் இவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து உள்ளார்.இந்நிலையில் நடிகர் ராஜ் கிரண் அவர்கள் படத்தில் மட்டுமே மிரட்டலான கதாப்பாத்திரத்தில் நடித்து வருவர்.அனால் நிஜ வாழ்க்கையில் இவர் படத்தில் இருப்பதை விட மிகவும் அமைதியான மனிதர் என்றே கூறலாம்.
மேலும் இவரது ரீசண்ட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதில் இவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் படு ஸ்டைலாக இருக்கிறார்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.