தமிழ் சினிமாவில் பல துறைகளில் முன்னணி பிரபலங்களாக கலக்கி வந்த பலர் தற்போது அந்த துறையை விட்டு ஹீரோவாக நடிக்க களம் இறங்கி உள்ளார்கள்.அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து வந்தவர் ஆர்.கேசுரேஷ்.இவர் தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளார்.இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தையும் மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வெளியான தர்மதுரை படத்தை தயாரித்து உள்ளார்.இவர் முதலில் வில்லனாக நடித்து வெளியான படமான தார தப்பட்டை என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.அதன் பின் படிபடியாக தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் நடித்து வெளியான படங்களான மருது,ஹர ஹர மகாதேவகி,இப்படை வெல்லும், ஸ்கெட்ச் என தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இதில் தற்போது ஆர்.கேசுரேஷ் அவர்களுக்கு திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது.
இந்த லாக்டவுனில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திருமணம் வெகுவிமர்சியாக நடக்காமல் அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை வைத்து திருமணத்தை முடிந்துள்ளர்கள்.
மேலும் இதில் வெறும் பதினைந்து பெயர் மட்டுமே கலந்து கொண்டு ஜோடியை வாழ்த்தியுள்ளர்கள்.மேலும் அவரது திருமண புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர்யில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறுகையில் என்னுடையே வாழ்கையில் நடந்த சந்தோஷமான தருணத்தை நான் உங்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
எப்படி கண்டு பிடித்தேன் pic.twitter.com/gqZbSvK0el
— அருண் அம்பலம் கள்ளன் (@Arun_para_sf) October 20, 2020