“சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சியே தம்பி” கன்னிருடன் நடிகர் சத்யராஜ் வெளியிட்ட உருக்கமான காணொளி-சோகமான ரசிகர்கள்…

0
137

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் விவேக்.மேலும் நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் மறைந்த செய்தி சினிமா துறையினர்கள் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காலை 4.35 மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இவர் அப்படத்திற்கு பிறகு தமிழில் அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.விவேக் அவர்கள் நடிப்பதை தாண்டி பல சமுக சேவைகளும் மற்றும் சமுக அக்கறைகளும் கொண்டவர்.மேலும் இவர் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.மேலும் அவ்வாறு இருக்க தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் புடித்த இவரின் மறைவு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.vivekஇவருக்கு பல சினிமா பிரபலங்கள் நேரிலும் மற்றும் சமுக வலைதளங்களிலும் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.நடிகர் சத்யாராஜ் அவர்கள் விவேக் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சியே தம்பி என கண்ணீருடன் கூறியுள்ளார்.அந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here