வைகை புயல் வடிவேலு படத்தில் காமெடியனாக நடித்த நடிகருக்கு ஏற்பட்ட சோகம்!! கண்ணீர் மல்க அளித்த பேட்டி!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
88

தமிழ் சினிமாவின் காமெடி கிங் மக்களால் செல்லமாக அழைக்கப்பெறுபவர் நடிகர் வைகை புயல் வடிவேலு.தென்னிந்திய சினிமாவில் பல காமெடி நடிகர்கள் ஒரு கால கட்டத்தில் கலக்கி வந்தாலும் மக்கள் மனதில் இன்று வரை தனது காமெடி கட்சிகளின் மூலமாகவும் மீம் மூலமாகவும் சிரிக்க வைத்து வருபவர் நடிகர் வடிவேலு.இவர் தமிழில் பல எண்ணற்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாக தனது முதல் படத்தை 2007 ஆம் ஆண்டு வெளியான 23ஆம் புலிகேசி மூலம் களம் இறங்கினார்.மேலும் அப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.வடிவேலு அவர்கள் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.அவ்வாறு இருக்க இவர் நடிக்காமல் இருந்த காரணத்தினால் அவருடன்  துணை காமெடியனாக பணியாற்றிய அனைவரும் பட வாய்ப்புகள் இல்லமால் போனது.அவ்வாறு வடிவேலுவுடன் நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் வெங்கள் ராவ்.இவர் தமிழில் வெளியான நீமட்டும்தான் என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.இப்படி ஒரு நிலையில் வெங்கள் ராவ் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறுகையில் நான் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்.நான் சினிமாவிற்குள் பைட் மாஸ்டராக நுழைத்தேன்.மேலும் என் உடல்நிலை காரணமாக நான் பைட் மாஸ்டராக தொடர முடியவில்லை.அப்படி இருக்க நான் வடிவேலு அவர்களை சந்தித்து படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டேன்.அவரும் என்னை பார்த்து விட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.வைகை புயல் வடிவேலு அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை என கூறினார்.என்னை போல உள்ள பலரை அவர் வாழ வைத்துள்ளார்.அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருந்தது.அனால் தற்போது எனது சிங்கம் களம் இறங்கிவிட்டது.அவர் நடிக்க வந்ததும் எனக்கும் மற்றும் என்னை போல் இருக்கும் பலருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.அதே போல் நான் யாரிடமும் காசு பணம் கேட்கவில்லை.எங்களுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு குடுங்கள் என கேட்கிறோம்.நாங்கள் அதன் மூலம் உழைத்து முன்னேறுகிறோம் என கூறியுள்ளார்.தற்போது வைகை புயல் வடிவேலு அவர்கள் நாய் சேகர் ரிடர்ன்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here