கோலிவுட் சினிமா துறையில் இப்போது உள்ள கால கட்டத்தில் பல புது முக நடிகர்கள் மற்றும் நடிகைகள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள்.மேலும் அதில் பல வாரிசு நடிகர்களும் அடங்கும்.இந்நிலையில் சினிமா துறையில் எப்படியாவது சாதித்து காட்ட வேண்டும் என பலர் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் ஒருவரான மக்கள் விஜய் சேதுபதி.இவர் ஆரம்ப காலத்தில் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை நடிகராக நடித்து அதன் பின்னர் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்று கொண்டார்.மேலும் இவர் நடித்த பல படங்களில் இவருக்கு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுந்தரபாண்டியன் படம் மூலம் இவர் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை பெற்றார்.இவர் அடுத்த கதாநாயகனாக நடித்து வெளியான படம் பிட்சா.
விஜய் சேதுபதி நடித்து வெளியான படங்களான நடுவுலகொஞ்சம்பக்கத்தகாணோம் ஜிகர்தண்டா பண்ணையாரும்பத்மினியும் என சொல்லிக்கொண்டே போகலாம்.அண்மையில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வெற்றிநடை போட்ட படமான மாஸ்டரில் வில்லன் கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு என நடித்து வந்த நிலையில் தற்போது ஹிந்தியில் களமிறங்கி உள்ளார்.தமிழில் வெளியான படம் மாநகரம் இப்படத்தை ஹிந்தி மொழியில் ரீமேக் செய்ய உள்ளார்கள்.மேலும் அதில் முனிஸ்காந்த் நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் அப்படத்தில் இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் அவர்கள் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது.மேலும் டைகர் 3 படத்தில் நடிகை கத்ரீனாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கபடுகிறது.மேலும் அப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.மேலும் இச்செய்தியானது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Home சினிமா செய்திகள் நடிகர் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க போகும் பிரபல பாலிவுட் நடிகை?? யாருன்னு தெரியுமா!! அப்போ படம்...