தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.இவரின் இரண்டாவது திருமணம் மிகவும் சிம்பிளாக முடிந்தது.மேலும் பாட்மிடன் வீராங்கனையான ஜுவாலா குட்டா அவர்களும் நடிகர் விஷ்ணு விஷாலும் காதலித்து வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.மேலும் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான பலே பாண்டியா குள்ளநரி கூட்டம் நீர்ப்பறவை முண்டசுப்பட்டி இடம் பொருள் ஏவல் இன்று நேற்று நாளை போன்ற படங்களின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தற்போது நல்ல கதைக்களம் கொண்ட படங்களை நடித்து வரும் நிலையில் இவர் சமீபத்தில் நடித்து வெளியான படமான ராட்சசன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் தனது காதலியான ஜுவலா குட்டா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தனது இரண்டாவது திருமணம் பதிவு திருமணமாக தான் இருக்கும் என கூறி இருந்தார்.கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் இம்முடிவை எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.இந்நிலையில் அவரின் திருமணம் சிம்பிளாக முடிந்தது.மேலும் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றனர்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Badminton player #JwalaGutta – Tamil actor #VishnuVishal Wedding Photos
Congratulations to the happy couple! 💕
More ⤵️https://t.co/42T5uRW3aZ pic.twitter.com/af6haGGo12
— Telugu Movies (@telugu_films) April 22, 2021