தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான மக்கள் மனதில் அவர் மறைந்தாலும் இன்று வரை நீங்காமல் இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் விவேக்.மேலும் விவேக்கின் சொந்த ஊர் மற்றும் அவரின் பூர்விக வீடு குறித்து தற்போது தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.நடிகர் விவேக் 1990 ஆம் ஆண்டு தனது திரை பயணத்தை காமெடி நடிகராக தொடர்ந்தார்.தனது நகைச்சுவை திறமையால் மக்களின் பேராதரவை பெற்றார் நடிகர் விவேக்.காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகர் விவேக்.நடிப்பை தாண்டி நடிகர் விவேக் பல்வேறு சமுக சேவைகளை செய்து வந்தார்.இவர் மக்களுகாக சமுக விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தார்.இவர் மறைந்த எ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் தீவிர ரசிகர்.மேலும் அவர் மீது கொண்ட அதிகப்படியான பற்றின் காரணமாக இவர் இலட்சகணக்கான மரங்களை நட்டார்.இவரின் முக்கிய கணவாக இருந்தது ஒரு கோடி மரங்களை நடுவது தான்.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி சின்ன கலைவாணர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு மறைந்தார்.அவரின் மறைவு அவரது ரசிகர்களுக்கும் மற்றும் திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் நடிகர் விவேக் அவர்கள் தமிழில் இறுதியாக நடித்த படம் ஆர்யா நடிப்பில் வெளியான அரண்மனை திரைபடத்தில் விவேக் நடித்து இருந்தார்.அவரது மறைவிற்கு பின் இப்படம் வெளிவந்தது என குறிப்பிடத்தக்கது.விவேக் அவர்களின் க்ரீன் காலம் என்ற பெயரில் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பரான செல் முருகன் தொடங்கி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் சென்னையில் விவேக் தங்கியிருந்த கோடம்பாக்கம் பத்மாவதி நகர் சாலையை சின்ன கலைவனார் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விவேக்வின் சொந்த வீடு குறித்து தற்போது சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.மேலும் நடிகர் விவேக்கின் சொந்த ஊர் கோவில்பட்டி.நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் சென்னை வந்த விவேக் சென்னையிலையே செட்டிலாகிவிட்டார்.அவர் பிறந்து வளந்த வீடு தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.