தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்த விவேக் அவர்கள் மாரடைப்பால் காலமானார்.விவேக் அவர்கள் உடல்நலக்குறைவால் SIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 4.35 மணியளவில் காலமானார்.மேலும் அவர் மறைந்த செய்தியானது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவையாக இருந்தவர் நடிகர் விவேக்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.இவர் அப்படத்திற்கு பிறகு தமிழில் அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
விவேக் அவர்கள் நகைச்சுவையின் மூலம் சமுக சிந்தனைகளும் இருக்கும்.அவ்வாறு இருக்க இவர் படங்களின் வாயிலாக கருத்தக்களை சொல்வது மட்டுமல்லாமல் அதனை தொடர்ந்து இவர் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.மேலும் இவரை மக்கள் அனைவரும் சின்ன கலைவாணர் என செல்லமாக அழைத்து வந்தார்கள்.
இப்படி ஒரு நிலையில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்க அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு வந்த விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.இந்நிலையில் இவர் அதிகாலை 4.35 மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.மேலும் இச்செய்தியானது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
Home சினிமா செய்திகள் காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்-திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி.