தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சித்ரா.இவர் தமிழில் அப்போது இருந்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.குழந்தை நட்சத்திரமாக அபூர்வ ராகங்கள் என்னும் படம் மூலம் அறிமுகமானார் நடிகை சித்ரா.இவர் அதன் பின் சேரன் பாண்டியன் என்னும் படத்தில் நடித்த அந்த கதாப்பாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.தமிழ் மலையாளம் ஹிந்தி தெலுங்கு கன்னடம் என இவர் நடிக்காத சினிமா துறைகளே கிடையாது.அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நடிகை சித்ரா பேமஸ்.நடிகை சித்ரா அவர்கள் சீரியல் தொடர்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்த நல்லெண்ணெய் விளம்பரத்திற்கு பிறகு இவரை பலரும் நல்லெண்ணெய் சித்ரா என அழைத்து வந்தார்கள்.நடிகை சித்ரா அவர்கள் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.மேலும் அவரின் மறைவு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Home சினிமா செய்திகள் 80களில் சினிமா துரையை கலக்கி வந்த நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்?? சோகத்தில் திரையுலகம்!! அஞ்சலி...