தமிழ் மக்களிடையே தற்போது பெரிதும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருவது பிரபல பாடகர் எஸ்பிபி-யின் மறைவு தான்.மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.மேலும் இந்த கொடிய நோயான கொரோனவின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.இந்நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போத் பெரிதும் எதிர்பர்கப்பட்ட நிகழ்ச்சியான பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி,வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி ஒளிபரப்பு ஆகா போகிறது.மேலும் இதில் பங்கு பெரும் போட்டியாளர்களின் பெயர்களை இன்னமும் அறிவிக்கத நிலையில் பல சினிமா பிரபலங்களில் பெயர்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து பல படங்களை நடித்துள்ள நடிகையான காயத்ரி அவர்கள் தற்போது பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற போகிறார் என சமுக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
மேலும் இவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து எழு படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற போவதாக வெளியாகி வரும் செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.அதிகார பூர்வ அறிவிப்பு அவர்களிடம் இருந்து இதை பற்றி வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற போகும் போட்டியாளர்களின் பட்டியில் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து வருகிறார்கள்.மேலும் நடிகை காயத்ரி பங்கு பங்கு பெற போகிறார் என்ற செய்தியானது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.