தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இருக்கிறார் லக்ஷ்மி மேனன்.இவர் சில படங்களே நடித்து இருந்தாலும் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் நடித்த படங்களான சுந்தர பாண்டியன், கும்கி, வேதாளம் என படங்களில் நடித்துள்ளார்.நடிகை லக்ஷ்மி மேனன் அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு வெளியான ரெக்க படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.மேலும் தற்போது நான்கு வருடம் கழித்து தற்போது மூன்று படங்களில் கமிட் ஆகி பபிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சியான பிக் பாஸ் போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்விருக்கிறது.மேலும் இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.இந்த கொரோன நோயின் காரணமாக இந்நிகழ்ச்சி தள்ளிபோன நிலையில் இப்போழுது மிக பிரம்மாண்டமாக தொடங்க விருக்கிறது .
மேலும் இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியளர்களின் பட்டியல் இன்னும் அதிகபூர்வமாக அறிவிக்கபடாத நிலையில் சில போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தது.அதில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், நடிகர் ஆரி, அணு மோகன் போன்றவர்கள் கலந்து கொள்ள போவதாக நூறு சதவிதம் உறுதியாகி உள்ளது.
இதில் நடிகை லக்ஷ்மி மேனன் கலந்து கொள்ள போகிறார் என்ற செய்தியானது இணையதளத்தில் பரவி வந்தது.அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நடிகை லக்ஷ்மி அவர்கள் அவரது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதில் நான் ஒன்னும் பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற போவதில்லை.அங்கே நான் பாத்திரத்தையோ அல்லது மற்றவர் உபயோகித்த கக்கூஸ்யோ கழுவ போவதில்லை என போவதில்லை என பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.