தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டடத்தில் பல முன்னணி நடிகைகள் தமிழ் சினிமா துறையை கலக்கி வந்த நிலையில் தற்போது இருக்கும் நடிகைகளின் வருகையால் பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்கள்.அவ்வாறு நடிகை ப்ரியாமணி அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2004 ஆம் ஆண்டு வெளியான கண்களால்கைதுசெய் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதன் பிறகு இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தார்.இவர் அதன் பிறகு வரிசையாக தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான பருத்திவீரன் மலைக்கோட்டை நினைத்தாலே இனிக்கும் என வரிசையாக வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ப்ரியாமணி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையில் அந்த மொழி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் பல மொழிகளில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பான பல நிகழ்சிகளில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.மேலும் இவர் பல நடன நிகழ்சிகளில் பங்கு பெற்று இருக்கிறார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
நடிகை ப்ரியாமணி அவர்கள் அவரது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.இந்நிலையில் அண்மையில் ப்ரியாமணி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram