நடிகை சங்கீதா அவர்கள் தனது கணவர் மற்றும் மகளுடன் கலைமாமணி விருது பெற்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.நடிகை சங்கீதா அவர்கள் சூர்யா முரளி நடித்த காதலே நிம்மதி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன்பின் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.இருப்பினும் அவர் பல்வேறு தமிழ் படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டினாலும் அவர் சூர்யா மற்றும் விக்ரம் நடித்த இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது அந்த திரைப்படத்திற்காக நடிகை சங்கீதாவிற்கு துணை நடிகைகான விருதும் துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.அதன் பிறகு திரையுலக பின்னணி பாடகரான கிரிஷ் என்பவரை திருவண்ணாமலை கோவிலில் திருமணம்செய்து கொண்டார் .
அவர்களுக்கு ஷிவ்யா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.நடிகை சங்கீதா அவர்கள் பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்தாற்போல் தனது நடிப்பு திறமையை தமிழ் திரை உலகில் வெளிபடுத்தி உள்ளார்.தற்பொழுது நடிகை சங்கீதா அவர்கள் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
மேலும் தற்போது இவர் தனது மகளுடன் புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.மேலும் அந்த பதிவு கீழே உள்ளது.
@krishoffl Can’t express in words for whatever u ve been & for what u r in my life . Thank u God 🙏🏻🙏🏻🙏🏻 Love u Shivhiya https://t.co/XhAvnK3fQG pic.twitter.com/oR8UAXtWU7
— sangithakrish (@sangithakrish) February 22, 2021