சின்னத்திரை பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய விஷயமான பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் மறைவு.மேலும் இவர் இவ்வாறு செய்து கொண்டது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.தற்போது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வரும் விஷயங்களான பல சினிமா பிரபலங்களின் மறைவு இந்த கொரோன காலகட்டத்தில் ஏற்கனவே மக்கள் பல அவஸ்தைகளை அனுபவித்து வருகிற நிலையில் பல முன்னணி பிரபலங்களின் மறைவு மக்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை சித்ரா.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.மேலும் இவர் அந்த சீரியல் தொடரில் முல்லையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் இவருக்கு தொழிலதிபருடன் நிச்சியதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்காக அனைவரும் காத்துக்கொண்டு இருந்தார்கள்.இந்நிலையில் இவர் இவ்வாறு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வருங்கால கணவரான ஹேமந்த் அவர்களிடம் போலீசார் விசாரணையில் சித்ராவிற்கும் தனக்கும் அக்டோபர் மாதமே திருமணம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.
இந்நிலையில் சித்ராவிற்கு நெருக்கமான பல சினிமா பிரபலங்கள் மற்றும் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.இதில் நடிகை ஷாலு அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் உனது வாழ்கை துணையை தேர்ந்தெடுத்ததில் தவறாகிவிட்டது.நான் உன்னிடம் கடைசியாக கூறியது நீ ஒரு தவறான வாழ்கை துணையை தேர்வு செய்து விட கூடாது என்பதற்காக கெஞ்சினேன் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.