சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகள் ஏராளம்.வெள்ளித்திரைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில்தான் அனைத்து நடிகைகளும் அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடுவர்.அப்படி ஒரு ஆசையில் சர்ச்சை போட்டோ ஷூட் செய்து வெளியிட்டுள்ளார் அம்மன் தொடர் நடிகை பவித்ரா கௌடா.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7:30மணிக்கு ஒலிபரப்பாகும் பக்தி தொடர் தான் அம்மன். ஐ. அகமது என்பவர் தயாரிக்க, ரவிபிரியன் என்பவர் இயக்கி வருகிறார். இத்தொடரின் பாக்கியலட்சுமி புகழ் ஜெனிபர், பிக்பாஸ் புகழ் சமியுக்தாஆகியோர் நடித்து வருகின்றனர். கன்னட நடிகையான சுபாரக்ஷாஎன்பவரும் நடித்து வருகிறார்.சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பவித்ரா கௌடா நடிக்க, அவருக்கு ஜோடியாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜிமல் என்பவர் நடிக்கிறார். அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரம் பெண்ணான சக்தியை சுற்றி நகர்கிறது.
இந்தத் தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பவித்ரா கௌடா,ஒரு அம்மன் போலவே சித்தரிக்கப்படுகிறார். கன்னடத்திலிருந்து சீரியல் மூலமாக தமிழுக்கு அடியெடுத்து வைத்திருக்கும் இவர் சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹாட் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தத் தொடரில் மிகவும் மங்களகரமாகவும்,பக்திமயமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் இவர், நிஜவாழ்க்கையில் அப்படியே ஆப்போசிட்டாக படுகவர்ச்சியான ஒரு நபர்.மாடலிங் துறையில் இருந்து வந்தவர் என்பதால் சமீபத்தில் இவர் வெறும் ஒரு தொப்பியை வைத்து தன்னுடைய முழு உடலையும் மறைத்தபடி ஒரு போட்டோ ஷூட் செய்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். அம்மன் வேடத்தில் நடிக்கும் ஒரு நடிகை இப்படி செய்யலாமா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படம் மிகுந்த சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.