தற்போது மக்களிடையே பெரிதும் பிரபலமாக பேசப்பட்டு வருவம் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்க உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் இருந்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக மக்கள் அனைவரும் இந்த பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகும் போட்டியளர்கள் யார் என்று தெரியாமல் சில சினிமா பிரபலங்களின் பெயர்கள் இணையத்தில் பரவி வருவதை அடுத்து குத்துமதிப்பாக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்ற உறுதி செய்துள்ளார்கள்.மேலும் இதில் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள், பாடகர்கள் என லிஸ்ட் பெருசாகி கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள போகும் விஜய்டிவியின் பிரபலமான அறந்தாங்கி நிஷா அவர்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர்.இவர் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.அதிலும் குறிப்பாக இவர் இப்போட்டியில் பங்கு பெற போவது உறுதியான நிலையில் இவர் அந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்னால் தனது குடும்பத்திற்காக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது அம்மா புகைப்படத்தை வெளியிட்டு நீங்க இல்லை என்றால் நான் இல்லாம,நீங்க மட்டும் தான் என்னோட நம்பிக்கை, நீங்க ஒரு நிமிஷம் கூட என்னோட பேசாம இருக்கமடீங்க, எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் அம்மா என பதிவிட்டுள்ளார்.அதே போல் தனது கணவர் மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்டு அதில் மகனே லவ் யூ ட, மச்சான் எப்பையும் போலவே சசிரிச்சு கிட்டே இருங்க என பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த பதிவு இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார் என நம்ப படுகிறது.இவர் செல்கிறார இல்லையா என்று இன்று மாலை தெரிந்து விடும்.