தமிழ் மக்கள் மத்தியில் தற்போது அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் பல மொழிகளில் வெற்றி நிகழ்ச்சியாக இருந்ததை அடுத்து தமிழில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி அதனை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்று சீசன்களை தொடர்ந்து நான்காவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.மேலும் அதில் மக்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களாக இருந்து வருபவர் ஆரி பாலாஜி ரியோ மற்றும் ரம்யா இவர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் ஏற்கனவே அளவில்லா ரசிகர்களை பெற்றுள்ளார்கள்.மேலும் இதில் ஏற்கனவே தனது காமெடி நிகழ்சிகளின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் அறந்தாங்கி நிஷா.இவர் வீட்டிற்குள் இருக்கும் போது தனது சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டாமல் இருந்ததால் மக்கள் அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்கையை நோக்கி பயணித்து வரும் நிலையில் நிஷா அவர்கள் மக்களுக்கு நன்றி கூறும் வகையில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி மேலும் நான் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு எனக்கு சப்போர்ட் செய்த அனைவர்க்கும் நன்றி என கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோவானது சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் இணையவாசிகள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
View this post on Instagram