உடல் எடை குறித்து தொடர்ந்து எழும் கேள்விகள், கடுப்பான பாக்கியலட்சுமி நடிகை.

0
105

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தொடர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுவது வழக்கமே.அப்படி 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற தொடர்தான் வாணி ராணி. இத்தொடரில் ராதிகா சரத்குமார் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார், அவர் நடித்தது மட்டுமின்றி அத்தொடரில் தயாரிப்பாளரும் அவர்தான். இத்தொடர் ஐந்து வருடங்கள் அனைத்து இல்லத்தரசிகளின் வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.nehah menonவாணி ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நேஹா.இவர் வாணி ராணி தொடரில் ராதிகா அவர்களின் வாணி எனும் கதாபாத்திரத்திற்கு மகளாக நடித்திருந்தார். கதாபாத்திரத்தின் பெயர் தேனு.தேனு என்ற பெயரின் மூலம் பிரபலமடைந்த இவர் அனைத்து இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி எனும் தொடரில் பாக்கிய அவர்களுக்கு மகளாய் நடித்து வருகிறார்.nehah menon

தற்போது 19 வயதாகும் இவர் சமீபத்தில் தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பலர்வாழ்த்து தெரிவித்து இருந்தாலும் சில பேர் அதனை விமர்சித்து வந்தனர், இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதா என்று. அதனைப் பொருட்படுத்தாத நேஹா, குப்பை கேள்விகளுக்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை என்று கூறிவிட்டார்.nehah menonசமீபத்தில் நடிகை நேஹா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் என்று போஸ்ட் போட்டு இருந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் உங்களின் எடை எவ்வளவு? என்று கேட்டிருந்தார்.இதனால் கடுப்பான நேஹா, ஏன் எப்போதும் ஒருவரின் எடை பற்றிய கவலை கொள்கிறார்கள்? அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் என்னைப் பற்றி தெரிந்துகொள்ளும் விஷயமா? அப்படி என்றால் நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளவே வேண்டாம். இது போன்ற கேள்விகள் எழுவது முதல் முறை கிடையாது என்று மிகவும் கோபத்துடன் தெரிவித்திருந்தார்.nehah menon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here