மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த கொரோனநோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் மக்களை காக்கும் வண்ணம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அவ்வாறு இருக்க இந்த நோயினால் பலரும் இவ்வுலகை விட்டு மறைந்து போயுள்ளர்கள்.மேலும் இதில் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அவர்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் சினிமா துறையில் பல முன்னணி பிரபலங்கள் உடல்நலகுறைவினாலும் மற்றும் இந்த கொரோனநோயின் தாக்கத்தாலும் மறைந்துள்ளர்கள்.இந்நிலையில் பிரபல நடிகரான வெங்கடேஷ் அவர்கள் மாரடைப்பால் காலமானார்.மேலும் இவரின் மறைவு சின்னத்திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கடேஷ் அவர்கள் தமிழில் நடித்து வந்த பிரபல சீரியல் தொடர்களான சரவணன் மீனாக்ஷி இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.மேலும் தற்போது ஈரமான ரோஜாவே பாரதி கண்ணம்மா என பல சீரியல் தொடர்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் வெங்கடேஷ் அவர்களின் மறைவு சீரியல் தொடர் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலரும் இவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.