பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி பல ரியாலிட்டி நிகழ்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் பல சீரியல் தொடர்கள் தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.அதுமட்டுமல்லாமல் இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் பல ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அவ்வாறு இதில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகள் மக்களுக்கு புடித்தமான ஒன்றாக தான் இருக்கிறது.அந்த வகையில் ஹிந்தியில் வெற்றிநடை போட்டுகொண்டு இருந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் இந்நிறுவனம் ஒளிபரப்பியது.மேலும் பிக்பாஸ் நிகழ்சிக்கு ஆரம்பம் முதலே இதற்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.மேலும் இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் வெளியாகினர்.இதன் நான்காவது சீசன் அண்மையில் தான் நிறைவுபெற்றது.மேலும் இந்த நான்காவது சீசன் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பல எதிர்பார்புகளுடன் இருந்து வந்த நிலையில் இதன் டைட்டிலை வென்றார் நடிகர் ஆரி அர்ஜுனன்.பிக்பாஸ் வீட்டிற்குள் தனது உண்மையான முகத்தினை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் போட்டியாளர் ஆவர்.
இந்நிலையில் நடிகை ஆரி அர்ஜுனன் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.நடிப்பை தாண்டி ஆரி அவர்கள் பல சமுக சேவைகள் அதாவது மக்களுக்கு உதவும் வகையில் ஜல்லிக்கட்டு விவசாயம் என பல சமுக அக்கறைகளுக்கு முன் நின்றவர்.
இவர் சில இளம் சமுதாயத்தினரை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இவர் மாற்றுவோம் மாறுவோம் என்னும் அறக்கட்டளையை நிறுவி உள்ளார்.மேலும் இவர் தனது மகள் பிறந்தநாள் அன்று அவரது கையாலையே ஒரு விதையை தனது மகளிடம் கொடுத்து நட சொல்லியுள்ளார்.மேலும் அது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரி.மேலும் அதை கண்ட ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
Home சின்னத்திரை தனது மகளின் பிறந்தநாள் அன்று பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி செய்த செயல்?? பாராட்டும் ரசிகர்கள்!! சொன்னது...