கடந்த அக்டோபர் நான்காம் தேதி மிக கோலாகலமாக கொண்டப்பட்டு வரும் இந்த நிலையில் மூன்று நாட்களை கடந்து நான்காவது நாள் ஆரம்ப மாக தொடங்கியது.இதில் பல போட்டியளர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதில் முதல் நாள் முதலே சண்டைகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டு வருகிற நிலையில் பிக் பாஸ் எப்போதும் போல் டாஸ்க் ஒன்றை ஹவுஸ் மேட்ஸ் கொடுத்துள்ளார்.அந்த டாஸ்க் ஆனது நீங்கள் இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள்,உங்கள் வாழ்க்கையின் கடினமான பாதையை பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார்.
அணைத்து போட்டியாளர்களும் தங்களது வாழ்வில் நடந்த சோகமான பக்கங்களை மக்கள் முன்னிலையில் கூறினார்.இதில் பிரபல தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஆரி அவர்கள் தனது பயணத்தை பற்றி கூறும் போது என்னுடைய வீட்டில் அனைவருமே படித்து வாழ்கையில் முன்னேறி விட்டார்கள்.நான் மட்டும் ஊர் சுற்றிக்கொண்டு இருந்தேன்.
மேலும் எனது தந்தை கடைசியாக என்னிடம் இருந்த செயினை விற்று என் கையில் 10000 ருபாய் கொடுத்து நீ சென்னைக்கு அனுப்பி வைத்தார்.வாய்ப்பு தேடி அலைந்த என்னை அழைத்து படத்தில் நடிக்க செய்தவர் சேரன் அந்த படத்திற்காக தேசிய விருதையும் வாங்கியுள்ளேன்.எனது தந்தை மறைந்த பிறகு எனது தாய் என்னை கவனித்துக்கொள்ள என்னிடம் வந்துவிட்டார்.
என் அம்மாவிற்கு பார்ச்கின் என்னும் நோய் இருந்தது,அந்நோய் நம்மை குழந்தையாகவே மாற்றி விடும் என கூறினார்.மேலும் நான் பட வாய்ப்பிற்காக ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது என்ன அம்மா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.
தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த பின்பு குழந்தையாகவே மாறிவிட்டார்.மேலும் நான் நடித்து கொண்டு இருந்த கடைசி நாள் ஷூட்டிங் இருக்கும் போது எனது தாய் மறைந்து விட்டார்.என தனது சக போட்டியாளர்களின் மத்தியில் கூறி கண்கலங்கினார் நடிகர் ஆரி.மேலும் தற்போது அவரது தாயின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.