சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக வளம் வருகிறது.மேலும் இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்த சீசன் தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சமையல் நிகழ்ச்சியாகும் இதில் சினிமா பிரபலங்களை போட்டியாளர்களாக களம் இறங்கி தங்களது சமையல் திறமைகளை வெளிக்காட்டி வருவார்கள்.அதோடு மட்டுமல்லாமல் இவர்களுக்கு உதவ கோமாளிகள் இதில் கலந்து கொண்டு தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்கள் கவர்ந்து விடுகிறார்கள்.இதில் பெரிதும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் கோமாளிகளான புகழ் பாலா ஷிவாங்கி மற்றும் சுனிதா.
மேலும் இந்நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.தற்போது விஜய்டிவியில் வெற்றிநடைபோட்டு வந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் வெற்றிகரமாக முடிந்தது.
அதில் போட்டியாளராக கலந்து கொண்ட ரேகா வனிதா ரம்யா பாண்டியன் மூவரும் கலந்து கொண்டு உள்ளார்கள்.மேலும் அப்புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.