தமிழ் சின்னத்திரை நிகழ்சிகளில் ஒன்றான இந்த பிக்பாஸ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் முதல் சீசன்களில் இருந்தே ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.இந்நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் தற்போது நடந்து வரும் பிக்பாஸ் மக்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.நாளுக்கு நாள் அந்த வீட்டில் இருக்கும் பிரபலங்களின் உண்மை முகம் வெளிவர தொடங்கியுள்ளது.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக களம் இறங்கி அணைத்து மக்களையும் ரசிகர்களாக ஈர்த்தவர் நடிகை அபிராமி.இவர் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் தனது முதல் படமான நோட்டா என்னும் படத்தில் விஜய் தேவர்கோண்டா அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமான நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்துள்ளார்.
பல வெப் சீரீஸ்களில் நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் நடிகை அபிராமி வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் உடல் இடை கூடி ஆள் அடையாளமே தெரியல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.