பிக்பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் தந்தை மற்றும் பிரபல எழுத்தாளருமான ஆர்.சி சம்பத் மாரடைப்பால் காலமானார்.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக களம் இறங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிதா சம்பத்.இவர் பிரபல பிக்பாஸ் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஆனைவரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.மேலும் அதில் அனிதா சம்பத் அவர்கள் தனது உண்மையான முகத்தினை வெளிக்காட்டி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை இருப்பர் என எதிர்பார்த்த நிலையில் இவர் போன வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.மேலும் அவர் வெளியேறியது அணைத்து அனிதா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் அனிதா சம்பத் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களிலேயே அவரது வீட்டில் ஏற்பட்டு சோகம்.அனிதா சம்பத் தந்தை ஆர்.சி சம்பத் அவர்கள் மாரடைப்பால் இந்த உலகை விட்டு மறைந்தார்.மேலும் இவர் பெங்களுரு சென்ற போது இந்த நிகழ்வு நடந்துள்ளதாக கூறி வருகிறார்கள்.
ஆர்.சி சம்பத் அவர்கள் சமுகம் பயன் பெரும் வகையில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவரது தாயார் பிரபல இதழ்களில் பணியாற்றி உள்ளார்.இந்நிலையில் இவர் மறைந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Home சின்னத்திரை பிக்பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் தந்தை காலமானார்?? திரையுலகினர் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் அஞ்சலி!!