தமிழ் மக்கள் மத்தியில் பிக்பாஸ் சீசன் 3யின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.மேலும் நடிகை யாஷிகா அனந்த அவரின் கார் மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்தில் சிக்கி அதில் பயணித்த பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகை யாஷிகா அவர்கள் தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்னும் படம் மூலம் கோலிவுட் துறையில் அறிமுகமானார்.மேலும் அப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.யாஷிகா தமிழ் சினிமாவில் நடித்த படங்களான இருட்டு அறையில் முரட்டு குத்து கவலை வேண்டாம் ஜோம்பி மூக்குத்தி அம்மன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இப்படி ஒரு நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.நேற்று யாஷிகா அவர்கள் தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார்.மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.மேலும் அதில் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரு நண்பர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் நடிகை யாஷிகாவின் தோழியான வள்ளி ஷெட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.மேலும் செய்தியானது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Home சினிமா செய்திகள் மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்!! ஒருவர் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் திரையுலகினர்!!