சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான பிக் பாஸ் மக்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாக வளம் வருகிறது.அதிலும் இந்த முறை பல பிரச்சனைகளை கடந்து வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.அதில் பங்கு பெற போகும் போட்டியாளர்களின் பட்டியல் பெயர்கள் இணையத்தில் பரவி வந்த வண்ணம் உள்ளது.அதில் பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில் அதை தெளிவு படுத்தும் விதமாக பல நடிகைகள் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போவதில்லை என கூறியும் உள்ளார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் தொடங்க போவதாக அந்நிறுவனம் பல வீடியோ ப்ரோமோகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்கள் மிக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
தற்போது இதில் பங்கு பெற போகும் போட்டியாளர்களின் பட்டியல் இணையத்தில் லீக்காகியுள்ளது அதை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.பிக் பாஸ் போட்டியில் பங்கு பெறுபவர்களின் லிஸ்ட்டில் சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆர்ஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.மேலும் இதை கண்ட ரசிகர்கள் அதனை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.