பிக்பாஸ் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக மக்களை அடுத்து என்ன நடக்க போகிறது என ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.மேலும் இதில் முதல் சீசன் முதல் மூன்றாவது சீசன் போலவே அணைத்து விதமான போட்டியாளர்கள் மத்தியில் ஏற்படும் சண்டைகள், சங்கடங்கள் என ஓடிக்கொண்டு இருக்கிறது.அதிலும் குறிப்பாக மக்களுக்கு பரிச்சியமான முகங்கள் சிலர் இருந்தாலும் அதில் ஒரு சில பெயர் மக்கள் மத்தியில் அவ்வளவாக தெரியவில்லை.மேலும் இதில் ஒரு போட்டியாளர்கள் அறிமுகமானவர் தான் பாலாஜி முருகதாஸ்.
பாலாஜி அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை.இவர் சினிமா துறைக்கு முன் பிரபல மாடலாக இருந்துள்ளார்.மேலும் இவர் அந்த வீட்டிற்குள் சக போட்டியாளர்களிடம் அன்பாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் போட்டி சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் ஏற்கனவே அனிதா மற்றும் சுரேஷ் அவர்களுக்கும் இடையே சண்டை நிலவி வருகிறது.இதனிடையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றை அந்த போட்டியாளர்கள் ஒவ்வருவராக தங்களது வாழ்கையில் கடந்து வந்த சோக பாதைகளை கூறி வருகிறார்கள்.
அதில் இன்று அந்நிறுவனம் வெளியிட்ட ப்ரோமோ ஒன்றில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தனது வாழ்கையில் நடந்து கஷ்டமான நிகழ்வுகளை தனது ஹவுஸ் மேட்களிடம் பகிர்ந்தார்.அதை கேட்ட ஹவுஸ் மேட் அனைவரும் கண்ணீரில் ஆழ்த்தியது..அந்த வீடியோ கீழே உள்ளது.