தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது விஜய் டிவி தான்.மேலும் இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து தொடர்களுக்கும் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் ஒரு சில நிகழ்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.இப்படி ஒரு நிலையில் இந்நிறுவனம் தொகுத்து வழங்கி மக்களிடையே பேராதரவை பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் அண்மையில் வெற்றிகரமாக முடிவடைந்தது.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது சமையல் நிகழ்ச்சியை மையமாக கொண்டது.இதன் சிறப்பம்சமாக இருந்து வருவது இதன் கோமாளிகள் தான்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் எத்தனையோ நிகழ்சிகளுக்கு மத்தியில் இந்நிகழ்ச்சியானது டாப்பில் உள்ளது.
இந்நிலையில் இதன் மூன்றாவது சீசன் ஒளிபரப்பு ஆகும் என எதிர்பார்க்க இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் யார் இந்த சீசனில் கலந்து கொள்ள போகிறார்கள் என எதிர்பார்த்து வருகிறார்கள்.மேலும் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.
இப்படி ஒரு நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.மேலும் பிக்பாஸ் சீசன் முடிவடைந்து அதன் போட்டியாளர்கள் அனைவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்சிகளில் கலந்து கொண்டுள்ள நிலையில் சனம் ஷெட்டி அவர்கள் மட்டும் எந்த ஒரு நிகழ்சிகளிலும் பங்கேற்கவில்லை.இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி அவர்களுக்கு குக் வித் கோமாளியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமா என பொறுத்திருந்து பாப்போம்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி சீசன் 3யில் கலந்துகொள்ள ஆவலாக இருக்கும் பிக்பாஸ் பிரபலம்?? அட இவங்களா!!...