தமிழ் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமாக மக்களின் பேராதரவை பெற்று வரும் தொலைக்காட்சியான விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்சிகளுக்கும் மற்றும் சீரியல் தொடர்களுக்கும் என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதில் இடம் புடித்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்நிகழ்ச்சியானது ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து இதனை தமிழில் விஜய் நிறுவனம் ஒளிபரப்பியது.பிக்பாஸ் முதல் சீசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை அடுத்து நான்கு சீசன்கள் ஓடியது.மேலும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனாது.அதில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் அவ்விளையாட்டை சிறப்பாக விளையாடினார்கள்.மேலும் இதில் மலேசியாவை சேர்ந்த பாடகர் முகன் முதல் பட்டத்தை வென்றார்.இரண்டாவதாக பிரபல நடன இயக்குனர் சாண்டி வென்றார்.
சாண்டி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாணட மயிலாட என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதன் பின்னர் பல நிகழ்சிகளிலும் பல படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் பிக்பாஸ் சீசன் 3யில் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் சாண்டியின் மகள் லாலா தான்.பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவரது மகளான லாலா உள்ளே சென்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இப்படி ஒரு நிலையில் சாண்டியின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் தான் அவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது.இந்நிலையில் சாண்டி அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் அச்செய்தியை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் தனது இரண்டாவது குழந்தையின் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சாண்டி!! என்ன குழந்தை தெரியுமா!! வாழ்த்தி...