பிக்பாஸ் பிரபலம் சுரேஷ்சக்கரவர்த்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் ரீஎன்ட்ரி ஆகிறார்.சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல ஒரு சிறந்த தொகுப்பாளர் சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த சமையல் கலைவல்லுநர் ஆவார்.இவர் சென்னையில் உள்ள செயின்ட்பேட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.அவர் இளம் வயதுலையே அவரது பெற்றோர் மறைந்துவிட்டார்கள்.இவரது மனைவியின் பெயர் ஸ்ரீகலாசுரேஷ் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.இவர் 1991 ஆம் ஆண்டு அசோகன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.அவர் பல மொழி படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.1994 ஆம் ஆண்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை இயக்கினார்.அதன் பிறகு ஒரு சில தமிழ் தொலைகாட்சி விளையாட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார் .தற்போது அவர் அர்ஜுன் சிதம்பரம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ஒன்றில் தானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் சிதம்பரம் ஏற்கனவே அஜித் நடித்த நேர்கொண்டபார்வை உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின்செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் துஷாரா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நீண்ட இடைவேளைக்குப்பின் சுரேஷ்சக்கரவர்த்தியை மீண்டும் பெரிய திரையில் பார்க்க இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Home சினிமா செய்திகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி!! ஹீரோ யார் தெரியுமா!!...